ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குஷி(ஹிந்தி), பூட், பிடா, நோ என்ட்ரி, ஆர்யன், டார்லிங் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் பர்தீன் கான். இவருக்கு கடந்த 2005-ம் ஆண்டு நடாஷா மத்வானியுடன் திருமணம் நடந்தது. ஏற்கனவே இவர்களுக்கு தியானி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், நடாஷா மீண்டும் கர்ப்பமானார். இப்போது நடாஷா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் பர்தீன். குழந்தைக்கு அசாரிஸ் என்று பெயரிட்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் பர்தீன்-நடாஷாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.