நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இப்போதுதான் தொட்டதெற்கெல்லாம் 'ஆப்ஸ்' வந்துவிட்டதே, அந்தவகையில் மலையாள திரையுலகத்தில் முதன்முதலாக ஒரு நடிகரின் திரையுலக வரலாறை தெரிந்து கொள்வதற்காகவே ஒரு 'ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது என்றால் அது நடிகர் மோகன்லாலுக்காகத்தான். 'வேஷங்கள்' என பெயரிடப்பட்ட இந்த 'ஆப்'பை உருவாக்கி, மோகன்லாலின் இந்ததனை வருட திரையுலக பயணத்திற்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக சமீபத்தில் வெளியிடப்பட்டது.
மோகன்லால் நடித்த படங்கள், அவரது முக்கியமான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள், அவர் படங்களின் பிரமிக்க வைக்கும் வீடியோ காட்சிகள் என எல்லாமும் இந்த 'ஆப்'பில் அடங்கி இருக்கிறதாம். மோகன்லால் ரசிகர் அல்லாதவர் கூட இந்த 'ஆப்'பின் மூலம் அவரது ரசிகராக மாறும் விதமாக இந்த 'ஆப்' உருவகபட்டுள்ளதாம்.
இந்த 'ஆப்' வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன்லால், “மக்கள் என் மோசமான படத்தை விமர்சிப்பார்கள். அப்போது வருத்தம் ஏற்படும்.. அதேசமயம் எனது நல்ல படத்தை புகழ்வார்கள்.. அப்போது சந்தோசம் ஏற்படும்.. அதனால் இந்த இரண்டு வித உணர்வுகளையும் ஒரே மாதிரி அணுக வேண்டுமே தவிர நீண்ட நாட்களுக்கு அவற்றை தலையில் ஏற்றிக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என கூறினார்.