'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தி நடிகை இஷா குப்தா, சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டார், இதற்கே ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்போது சில நிர்வாணப் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆபாசமான 9 புகைப்படங்கள் அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். ஒவ்வொரு புகைப்படமும் எக்கச்சக்கமான லைக்குகளை வாங்கியிருந்தாலும் பலரும் அவரை அப்படிப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
சன்னி லியோன், பூனம் பாண்டே வரிசையில் இடம் பெற இஷாவுக்கும் ஆசையா என அவர்கள் கேட்டிருக்கிறார்கள். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் இப்படிப்பட்ட புகைப்படப் பகிர்வுகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் ரசிகர்களிடம் எளிதில் சென்றடைவதற்கு வசதியாக இருக்கிறது. மேலும், பரபரப்பை ஏற்படுத்தி செய்திகளிலும் இடம் பெற வழிவகை செய்கிறது. இதனால்தான் சிலர் இப்படி செய்வதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமே இப்படி செய்து வந்தாலும், தமிழ் நடிகைகளில் இது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர் '2.0' படத்தின் நாயகி எமி ஜாக்சன். சமூக வலைத்தளங்கள் பல விதங்களில் கட்டுப்பாடற்று இருப்பதற்கு இது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.