ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்-சிவா கூட்டணி இணைந்துள்ள படம் விவேகம். வீரம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 34 கோடிக்குத் தான் விலைபோனது. வேதாளம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 42 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டது. அதோடு, வேதாளம் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைந்ததால் படத்தை வாங்கியவர்கள் லாபம் சம்பாதித்தனர்.
இப்போது வேதாளம் படத்தைவிட சுமார் 12.5 கோடிக்கு கூடுதலாக பிசினஸ் ஆகியிருக்கிறது விவேகம். அதாவது விவேகம் படத்தின் தமிழக தியேட்டர்கள் உரிமை மட்டும் 54.5 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. விவேகம் ஏரியா வாரியாக என்ன விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்ற விவரம்...
சென்னை சிட்டி - 5 கோடி
செங்கல்பட்டு - 11.50 கோடி
வட ஆற்காடு - 4 கோடி
தென் ஆற்காடு - 3.25 கோடி
மதுரை - 6.30 கோடி
சேலம் - 5.35 கோடி
கோவை - 9.30 கோடி
திருச்சி, தஞ்சாவூர் - 6.20 கோடி
திருநெல்வேலி, கன்னியாகுமரி - 3.60 கோடி