விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
ஒரு பக்கம் ஹீரோவாகவும் இன்னொரு பக்கம் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. விஐபி-2 படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்துள்ள சமுத்திரக்கனி, ரஜனியின் காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சுமார் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். எனவே காலாவில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கியுள்ளார்.
அடுத்து பிரியதர்சன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. மலையாளத்தில் வெற்றியடைந்த 'மகேஷின்டெ பிரதிகாரம்' படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் நடிப்பதற்கும் சமுத்திரக்கனி கணிசமான சம்பளம் வாங்கியிருக்கிறார்.
இந்தப் படத்தை முடித்துவிட்டு தாம்ரா இயக்கும் ஆண் தேவதைகள் படத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் சமுத்திரக்கனி. இந்தப் படத்துக்கு ஒரு வாரம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான தொண்டன் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்ததால் ஆண் தேவதை படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமுத்திரக்கனியும் ஆண் தேவதை படத்தின் இயக்குநரான தாமிராவும் கே.பாலசந்தருடைய சிஷ்யர்கள் என்பது உப தகவல்.