இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி-2 படத்தின் மெகா ஹிட்டுக்குப்பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. தெலுங்கில் ரன் ராஜா ரன் என்ற ஹிட் படத்தை இயக்கிய சுஜீத் இந்த படத்தை இயக்குகிறார். பாகுபலி-2 படம் வெளியாகி பல மாதங்களாக ஓய்வெடுத்து வந்த பிரபாஸ் பின்னர் ஒரு பாடி பிட்னரை வைத்து தனது உடல் எடையையும் சற்று குறைத்து ஸ்டைலிசான தோற்றத்துக்கு மாறி விட்டார்.
மேலும், தமிழில் வெயில், பையா, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மதி, பிரபாஸின் சாஹோ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் 7 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறதாம். அந்த வகையில், சாஹோ படத்தின் மொத்த படப்பிடிப்பு 180 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாம்.