தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தலைப்பைப் பார்த்ததும் தாறுமாறாக யோசித்தால் நீங்கள் ஓவியாவின் தீவிர ரசிகர் என்பது உண்மை. தெலுங்கில் மட்டுமே எடுக்கப்படும் படங்களைக் கூட தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுத்தோம் என்று பொய் சொல்லி இப்போது தமிழ் ரசிகர்களை சிலர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியிருக்க ஒரு தெலுங்குப் படத்தைப் பற்றி தமிழில் நாமே சொந்தமாக ஒரு தலைப்பு வைத்து செய்தி கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை. நாயகன் அல்லது இயக்குனர் பெயருடன் தான் ஒரு படம் அடையாளப்படுத்தப்படும். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் ஓவியா பெயரை வைத்து சொன்னால்தான் மவுசு அதிகம்.
தெலுங்கில் ஓவியா கதாநாயகியாக அறிமுகமாகும் படம் 'இதி நா லவ் ஸ்டோரி'. அதைத்தான் நாமே தமிழில் மொழி பெயர்த்து 'இது என் காதல் கதை' எனப் பெயர் வைத்து விட்டோம். இதைப் படித்துவிட்டு யாராவது இந்தத் தலைப்பை பதிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தெலுங்குப் படத்தை ரமேஷ் கோபி இயக்கியுள்ளார், ஸ்ரீநாத் விஜய் இசையமைத்துள்ளார்.
தமிழில் 'காதல் சுகமானது, புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18' போன்ற படங்களில் நாயகனாக நடித்த தருண் குமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக ஓவியா நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசரை சில மாதங்களுக்கு முன்பு நாகார்ஜுனா வெளியிட்டு பாராட்டியுமிருக்கிறார். நாமும் கூகுள் செய்து டீசரைத் தேடிப் பார்த்தோம். சும்மா சொல்லக் கூடாது, ஓவியா 'பிக் பாஸ்'ஐ விட பல மடங்கு அழகாகத் தெரிகிறார்.
படத்தை விரைவில் வெளியிட உள்ளார்களாம். தெலுங்கில் வெளியிடும் போதே நாம் சொன்னபடி ஓவியாவின் 'இது என் காதல் கதை' எனத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டால் தெலுங்கை விடப் பெரிய வெற்றி பெறும்.