தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் நடித்திருக்கிறார்கள். சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிற 24ந் தேதி படம் வெளிவர இருக்கிற நிலையில் படம் பற்றிய புதிய புதிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
படத்தில் அஜித் சர்வதேச இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் சர்வதேச பயங்கரவாதிகளையும், போதை மருந்து கடத்தல் கும்பலையும் உலகம் முழுவதும் சுற்றி வேட்டையாடுவது தான் கதை. ஹாலிவுட் தரத்தில் உருவாகி உள்ளது. இதில் அஜித்துடன் மோதும் தீவிரவாத கும்பல் தலைவியாக நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெஹிக். 29 வயதாகும் இவர் போஸ்னியா நாட்டைச் சேர்ந்தவர். நவம்பர் மேன், பிலிம் யூ பூஜி, உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
விவேகம் படத்தில் நடித்திருப்பது குறித்து அமிலா கூறியிருப்பதாவது: விவேகம் போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெருமை. ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்த தி நவம்பர் மேன் படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா விவேகம் பட வாய்ப்பினை எனக்களித்தார் . விவேகத்தில் எனது நடிப்பு மட்டுமின்றி ஆக்ஷ்ன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது. ஆக்ஷ்ன் படங்களின் ரசிகையாக எனக்கு இயக்குனர் சிவா கூறிய விவேகம் படத்தின் கதையும், அதில் எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.
அஜித்தை சந்திப்பதற்கு முன்னரே அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் சந்தித்தபொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையாக மனிதராக எல்லோருடனும் பழகினார். அவருடைய தொழில் பக்தி நான் இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை. எல்லா ஆபத்தான சண்டை கட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தினார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளலும், பாசிட்டிவிட்டியும் உள்ளது. படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த தொழில் பக்தியுடன் பெரிய அளவில் உண்மையாக உழைத்தது. இந்திய சினிமா ரசிகர்கள் விவேகம் படத்தை கொண்டாடுவார்கள் என உறுதியாக சொல்லுவேன். என்றாகிறார் அமிலா.