தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம் படத்தில் அறிமுகமான சதா போய்யா... போ... போ என்ற ஒற்றை வரி வசனத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு, தமிழில் 50 படங்களுக்குமேல் நடித்து விட்டார். ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார். எவ்வளவு வேகமாக வளர்ந்தாரோ அவ்வளவு வேகமாக கீழேயும் இறங்கினார். புலிவேஷம் என்ற படத்தில் ஆர்கேயுடனும் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தமிழில் மதகஜராஜா படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடினார்.
தற்போது அவர் டார்ச் லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். விஜய் நடிப்பில் தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்குகிறார், புதுமுகம் உதயா, ரித்விகா, ஏ.வெங்கடேஷ், சுஜாதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜேவி இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இது பற்றி இயக்குனர் அப்துல் மஜீத் கூறியதாவது:
பாலியல் தொழிலுக்கு எந்த பெண்ணும் விரும்பி வருவதில்லை. வறுமையாலும், துரோகத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் அதற்குள் தள்ளப்படுகிறார்கள். அந்த சூழ்நிலைகளை சமாளித்து எப்படி பாலியல் தொழிலுக்கு செல்லாமல் தப்பிக்கலாம் என்று பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் தயாராகி வருகிறது.
நிறைய நடிகைகளிடம் இந்த கதையை கூறியும் அவர்கள் நடிக்க மறுத்து விட்டனர். இமேஜ் போய்விடும் என்றனர். கடைசியாக சதாவிடம் கதை சொன்னபோது இது போன்ற படங்கள் சமூகத்துக்கு அவசியம் தேவை என்ற கூறி நடிக்க ஒப்புக் கொண்டார். கதை 1990களில் நடக்கிறது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. என்றார் அப்துல் மஜீத்.