பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரியவில்லை என்பது போல தற்போது பிருத்விராஜ் நடித்து வரும் புதிய படமான 'விமானம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இப்போது வெளியிட்டுள்ளார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல் படமாக இது உருவாகிறது.
சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ்.. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார்.
அந்த ஷாஜியின் கதை தான் இப்போது பிருத்விராஜின் 'விமானம்' படமாக உருவாகி வருகிறது. ஷாஜி கேரக்டரில் தான் பிருத்விராஜ் நடிக்கிறார். இந்தப்படத்தை எழுத்தாளர் பிரதீப் எம்.நாயர் என்பவர் இயக்கியுள்ளார்.. கிளாசிக்கல் டான்சரான துர்கா லட்சுமி என்பவர் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஏற்கனவே இதை கதையை தழுவி, இந்தப்படத்திற்கு போட்டியாக எடுக்கப்பட்ட வினீத் சீனிவாசன் நடித்த 'எபி' படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.. அனால் பிருத்விராஜின் 'விமானம்' உயரே பறக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் 'விமானம்' படக்குழுவினர்..