ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வரும் வேளையில் பாட்மின்டன் பிரிவில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த சாய்னா நேவலின் வாழ்க்கையும் சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் சாய்னா வேடத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அமோல் குப்தே இயக்குகிறார்.
இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் நடிப்பது குறித்து அமோல் குப்தே கூறியிருப்பதாவது... "சாய்னாவின் முகம், உடலமைப்போடு ஸ்ரத்தாவின் முகம், உடலமைப்பு ஒத்துப்போகிறது. இந்த கதையை சுமார் இரண்டாண்டுகள் தயார் செய்து வந்தேன். ஆரம்பத்திலிருந்தே எனது முதல் சாய்ஸாக ஸ்ரத்தா தான் இருந்தார். இதுதொடர்பாக சாய்னாவுடன் கூட கலந்து ஆலோசித்து இருக்கிறேன். தற்போது ஸ்ரத்தா பாட்மின்டன் வீரர், ஜித்தேஷ் படுகோனேவிடம் பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது" என்றார்.