பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படம் சினிமாவாக உருவாகி வருகிறது. இதில் ரன்பீர், சஞ்சய் தத்தாக நடிக்கிறார். இதனிடையே சஞ்சய் தத்தின் பூமி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய சஞ்சய்யிடம், உங்களின் வாழ்க்கை படத்தை எண்ணி பயம் ஏதும் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டபோது, சஞ்சய் தத் கூறியதாவது...
"எதைக்கண்டும் நான் பயப்படவில்லை. என் வாழ்க்கையில் மறைப்பதற்கு ஒன்று இல்லை. அதேசமயம் இந்தபடத்தில் என் காதல் தொடர்பான விஷயங்கள் இருக்காது என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
பூமி படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் படமாக உருவாகி உள்ள இந்த பூமியில் சஞ்சய்யின் மகளாக அதிதி ராவ் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற செப்., 22-ம் தேதி ரிலீஸாக உள்ளது.