அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
சினிமா வாய்ப்புகள் இன்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு திடீர் பிரபலமானார். அவர் நடித்து முடித்து வெளிவராமல் இருந்த சீனி என்ற படத்தை ஓவியாவை விட்டா யாரு என்று பெயர் மாற்றி வெளியிட இருக்கிறார்கள். இது தவிர ஓவியா மீது தமிழக மக்களுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு ஆதரவு பெருகி இருப்பதால் பெரிய படங்களில் நடிக்ககூட அவருக்கு வாய்ப்புகள் நெருங்கி வருகிறது.
விஜய், முருகதாஸ் இணையும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுதவிர விஷ்ணு நடிக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடிக்கிறார். வேறு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இந்த நிலையில் ஓவியா தனது ஹேர் ஸ்டைலை ஆண்கள் போன்று மாற்றியிருக்கிறார். இது தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஆரவை காதலித்தது, தற்கொலைக்கு முயன்றது. எதிலும் ஒட்டுதல் இல்லாமல் இருந்தது. கமலின் கேள்விகளுக்கு முரணான பதில்களை சொன்னது இவற்றை வைத்துக் கொண்டு அவர் தீவிர மன அழுதத்ததில் இருப்பதாக கூறப்படுகிறது. திடீர் திடீரென பொது இடங்களில் தோன்றுகிறார். ரசிகர்கள் கூட்டத்தை பத்திரிகையாளர்கள் கூட்டம் என்று கருதி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். இப்போது திடீரென தன் ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்கிறார். ஓவியாவின் நடவடிக்கைகள் அனைத்தும் புதிராகவே இருக்கிறது. என்கிறார்கள் சினிமா பிரமுகர்கள்.