Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

பிரச்னைகள் எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி: அமலா பால்

11 ஆக, 2017 - 00:47 IST
எழுத்தின் அளவு:
I-will-face-all-problem-easily-says-Amala-paul

துரத்தும் சர்ச்சை, தனிமை வாழ்க்கை, இப்படி எல்லாவற்றையும் ஓரம் கட்டி வைத்து, திரைப்படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார், அமலா பால். வி.ஐ.பி - 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, சென்னை வந்த அமலா, நமக்கு அளித்த பேட்டி.

வி.ஐ.பி., - 1, வி.ஐ.பி., - 2 படங்களுக்கு என்ன வித்தியாசம்?


முதல் படத்தில், ஹீரோவும், நானும் காதலித்தோம். இரண்டாவது படத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்வோம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இரண்டாவது பாகம் இருக்கும். இதில், எனக்கான கேரக்டரை, மிகவும் அனுபவித்து, ரசித்து நடித்திருக்கிறேன்.


தனுஷுடன் தொடர்ந்து நடிப்பது பற்றி?


தனுஷ், திறமைசாலி; கடும் உழைப்பாளியும் கூட. படப்பிடிப்பில், உடன் நடிக்கும் நடிகர்கள் சிறப்பாக நடித்தால் தான், அந்த காட்சி நன்றாக வரும் என்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுவார். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு உண்டு. ஒவ்வொரு படத்திலும், அவரிடம் இருந்து, புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.


இதில், கஜோலுக்கும், உங்களுக்கும் சேர்ந்து நடிப்பது போன்ற காட்சிகள் உள்ளனவா?


இரண்டு, மூன்று காட்சிகளில் தான், கஜோலுடன் நடிச்சிருக்கேன்; அதுவே பெரிய அனுபவம். சின்ன வயதில் இருந்து, கஜோல் படத்தை பார்த்து, ரசித்திருக்கிறேன். படப்பிடிப்பின் போது, அவங்க நடிப்பதை, ஒரு ரசிகையாக பார்த்து ரசித்தேன்.


சவுந்தர்யாவுடன் பணியாற்றிய அனுபவம்?


இந்த படத்தில், எனக்கு டாக்டர் கேரக்டர். அதனால், இதில் நான் அணிய வேண்டிய உடைகள், எப்படி இருக்க வேண்டும், என்ன நிறத்தில் இருக்கு வேண்டும் என்றெல்லாம், சின்ன சின்ன விஷயங்களில் கூட, ரொம்பவே மெனக்கெட்டு வேலை செய்தார், சவுந்தர்யா. அவரது உழைப்பு, படம் ரிலீசானதும் தெரியும்.


பெரிய நடிகர்களுடன் நடிக்க, இன்னும் வாய்ப்பு வராதது ஏன்?


விக்ரம், விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்து விட்டேன். அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சில காரணங்களால், அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது. அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன், விரைவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெண்கள் இயக்குனர்கள் படத்தில் நடிப்பது பற்றி?
பெண் இயக்குனர்கள் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பெண் என்பதால் சுதந்திரம் இருக்கும், நம்மை கவனமாக பார்த்துப்பாங்க, டிஸ்கஸ் பண்ணலாம். விஐபி 2-வை பொறுத்தவரை நிறைய பெண்கள் பணியாற்றினோம். அதனால் ஜாலியாகவே வேலை பார்த்தோம்.

அம்மாவாக நடிக்க தயங்கினீங்களா?

ஒவ்வொரு படம் பண்ணும்போதும் ஒவ்வொரு வாழ்க்கையை நான் பார்க்கிறேன். அம்மா கணக்கு படம் பண்ணும்போது சாந்தி என் பெண்ணின் வாழ்க்கையை பார்த்தேன். எனக்கு தெரியாத ஒரு வாழ்க்கையை ஒவ்வொரு படத்திலும் வாழ்கிறேன்.


படப்பிடிப்பு இல்லாத சமயங்களில்?


கேரளாவில் உள்ள என் வீட்டுக்கு போய்விடுவேன். டில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் நண்பர்கள் உள்ளனர். அங்கும் போவேன். டிராவல் பண்றது ரொம் பிடிக்கும். யோகா, நீச்சல் பயிற்சி போன்றவற்றில், தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறேன்.

மைனா அமலா, கிளாமர் அமலாவாக மாறிட்டீங்களே?
மைனா மாதிரியே தொடர்ந்து நடிக்க முடியாது. ஒரு நடிகையாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அந்தந்த படங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கு. ஒரே டிரஸ்ஸை தொடர்ந்து பயன்படுத்த முடியாதே.


பிடித்த உணவு?


சாப்பாடு விஷயத்தில், ரொம்ப கட்டுப்பாடாக இருப்பேன். அளவோடு தான் சாப்பிடுவேன். மீன் உணவுகள் ரொம்ப பிடிக்கும். பிரியாணி அயிட்டங்களை தொடவே மாட்டேன்.


அமலாவின் பிளஸ், மைனஸ் என்ன?


என்னை, ஒரு நடிகையாக எப்போதுமே நான் நினைத்தது இல்லை. என் வாழ்வில் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அதற்காக, கலங்கியது இல்லை. ரொம்ப பாசிடிவான கேரக்டர் நான். இப்போது, 25 வயதாகிறது. எனக்கு, இன்னும் வாய்ப்பும், நேரமும் அதிகம் உள்ளன. அடுத்தகட்டத்துக்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். பிளஸ், மைனஸ் பற்றி, சொல்லத் தெரியவில்லை.


நீங்கள் இயக்குனரானால், ஹீரோ யார்?


கண்டிப்பாக புதுமுகங்கள் தான். புதுமுக நடிகர்களை வைத்துத் தான், புதிய விஷயங்களை சொல்ல முடியும். வாய்ப்பு கிடைக்கும் போது, இயக்குனராவது பற்றி முடிவு செய்வேன்.

நீங்கள் பணியாற்ற விரும்பும் இயக்குனர்கள்?
வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் தேதி பிரச்னையால் நடிக்க முடியவில்லை. அவர்கூட கண்டிப்பாக ஒரு படம் பண்ண வேண்டும். கவுதம்மேனன், மணி சார், ராஜமவுலி படங்களிலும் நடிக்க ஆசையாக உள்ளது.

ஏழு ஆண்டாக சினிமாவில் கற்றுக் கொண்டது?
இங்கு எனக்கு ஒரு இடம் உள்ளது. என்னால் எதையும் ஈஸியாக பண்ண முடியும் என நான் நினைத்து கொண்டால் அடுத்த நாளே என்னை தூக்கி எறிந்துவிடுவார்கள். அதனால் ஒவ்வொரு படத்தையும் முதல் படமாகவே நினைத்து உயிரை கொடுத்து உழைக்கிறேன். ஒவ்வொரு சூட்டிங்போதும் அந்த டீமுடன் இணைந்து கடுமையாக உழைக்கிறேன். என்னால் இன்று வேலையில்லை என்று சும்மா உட்கார முடியாது. இது நான் இங்கு கற்றுக் கொண்டது.


பிரபலங்கள் வாழ்க்கையில் சோதனை வருவது பற்றி?


பிரபலங்கள் மட்டும் அல்ல; எல்லாராது வாழ்க்கையிலும், சோதனை இருக்கும். யாராவது ஒருத்தருக்கு பிரச்னை இல்லைன்னு சொல்லுங்க பார்க்கலாம். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், கடவுள், ஏதாவது ஒரு குறையை வைப்பார்; அப்படி இல்லையென்றால், கடவுளை, நாம் மறந்து விடுவோம். பிரச்னைகள், எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. எந்த கடினமான பிரச்னை என்றாலும், அதை ஜாலியாகத் தான் எடுத்துக் கொள்வேன்.

Advertisement
ஜெமினி அளவுக்கு என்னால் காதலிக்க முடியாது: துல்கர் சல்மான்ஜெமினி அளவுக்கு என்னால் காதலிக்க ... பெண்களை மரியாதையாக நடத்துங்களேன்... ப்ளீஸ்!: ஆண்ட்ரியா பெண்களை மரியாதையாக நடத்துங்களேன்... ...


வாசகர் கருத்து (3)

appaavi - aandipatti,இந்தியா
11 ஆக, 2017 - 17:23 Report Abuse
appaavi அக்கா பாக்காத அல்வாவா...
Rate this:
11 ஆக, 2017 - 12:31 Report Abuse
சானக்யன் எத்தனை வருஷம் 25 வயசுலயே இருக்கீங்க ?
Rate this:
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
11 ஆக, 2017 - 10:19 Report Abuse
Murugan ஓகோ நீங்க அந்த பிரச்சனையை சொல்றீங்களா அக்கா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in