'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து, படங்களை இயக்கி வந்த ராஜா, இப்போது, சிவகார்த்திகேயனை வைத்து, வேலைக்காரன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, முதல் முறையாக நயன்தாரா நடித்துள்ளார். 'சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடிப் பொருத்தம் ஒர்க் அவுட்டாகுமா?' என, சந்தேகம் எழுப்பினால், 'நயன்தாரா, யாருடன் ஜோடியாக நடித்தாலும், ஒர்க் அவுட்டாகும். அந்த அளவுக்கு, நடிப்பில் அசத்தி விடுவார். ஜெய், விஜய் சேதுபதி ஆகியோருடன், நயன்தாரா நடித்த போதும், இது போல் தான் சந்தேகம் எழுப்பினர். ஆனால், அந்த படங்கள், 'ஹிட்' அடித்தன. அதே போல் தான், இந்த படமும் வெற்றி பெறும்' என்கிறது, படக்குழு. இந்த படத்தில், பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.