திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விஸ்வரூபம் படத்துக்கு பின், கோலிவுட்டிலிருந்து காணாமல் போன ஆண்ட்ரியா, தரமணி படத்தின் மூலம், இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளார். ஹீரோயின், சிறப்பு தோற்றம், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் என, எந்த வேடமாக இருந்தாலும், சற்றும் தயக்கம் காட்டாமல் நடிப்பவர், ஆண்ட்ரியா. அப்படியிருந்தும், அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த குறையை போக்கும் வகையில், நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த தரமணி, இப்போது வெளியாகிறது. இந்த படத்தில், வசந்த் ரவி என்பவர், ஹீரோவாக நடித்தாலும், படத்தின் மொத்த கதையும், ஆண்ட்ரியாவை சுற்றித் தானாம். அதனால், இதில் நடிப்புத் திறமையை காட்டுவதற்கு, அவருக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.