ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கதாநாயகன் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் செல்லப்பா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக, நடித்து தயாரித்து வருகிறார் விஷ்ணு விஷால். சிலுக்குவார்பட்டி சிங்கம் என்று பெயரிடப்படுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஓவியா நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஓவியாவுக்கு தமிழில் மார்க்கெட் இல்லை. எனவே அவருக்கு சின்ன கேரக்டர்தான் கொடுக்கப்பட்டிருந்தது. 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஓவியாவுக்கு ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே. ஏறக்குறைய கௌரவத் தோற்றம் என்கிற அளவிலேயே அவருக்கு கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு புகழ் கிடைத்திருப்பதால், ஓவியாவின் கேரக்டரை கதாநாயகிக்கு இணையாக மாற்றலாமா என பரிசீலித்து வருகிறார்களாம். ஆனால் ஓவியா சம்பள விஷயத்தில் கொஞ்சம் டிமாண்ட் பண்ணுகிறாராம். எனவே, ஓவியா உடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை என்றால் ஏற்கனவே ஸ்கிரிப்ட்டில் உள்ளபடி அவரை பயன்படுத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.
கருணாகரன், யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளைச் சுற்றி நடைபெற்றுள்ளது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது படக்குழு.