அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
போடா போடி, நானும் ரவுடிதான் படங்களை இயக்கிய விக்னேஷ்சிவன் தற்போது சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்குகிறாராம். அப்படி சிவகார்த்திகேயன்-விக்னேஷ்சிவன் இயக்கும் அந்த படத்திற்கு அவர்கள் இருவரின் பிடித்தமான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறாராம்.
மேலும், தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், இதற்கு முன்பு தன்னை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து விட்டு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.