தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மராத்தியில் வெளியான போஸ்டர் பாய்ஸ் படம், ஹிந்தியில் ரீ-மேக்காகி வருகிறது. சன்னி தியோல், பாபி தியோலுடன் ஸ்ரேயாஸ் தல்படே நடிப்பதுடன் இயக்கவும் செய்திருக்கிறார். சன்னி தியோல் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்ரேயாஸ் தல்படே கூறியதாவது...
"சன்னி தியோல் மிகவும் அமைதியானவர், யாருடனும் அவ்வளவாக பேசமாட்டார், கூச்ச சுபாவம் உடையவர். ஆனால் அதேசமயம் அவர் என்னை இளைய சகோதரர் போன்று பார்த்தார். சன்னியிடம் காட்சியை விளக்கியபோது நம்பிக்கையின்றி தான் சொல்வேன், ஆனால் நான் சொல்ல வந்த விஷயத்தை புரிந்து கொண்டு முழு ஈடுபாட்டோடு நடிப்பார். எனக்கு பலவிதத்திலும் உறுதுணையாக இருந்ததோடு, நிறைய உதவிகளையும் செய்தார்" என்றார்.
போஸ்டர் பாய்ஸ் படம் செப்., 8-ம் தேதி ரிலீஸாக உள்ளது.