ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னாள் உலக அழகியும் இப்போதும் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராயுடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என நிறைய இளம் முன்னணி நடிகர்களே காத்துக்கிடக்கிறார்கள். அப்படியிருக்க படம் முழுதும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தும் அதை வேண்டாம் என மறுத்துள்ளார் பாலிவுட்டை சேர்ந்த இளம் நடிகர் அக்சய் ஓபராய்.. பெயரை பார்த்ததுமே ஓரளவுக்கு காரணத்தை உங்களால் கிரகிக்க முடிகிறதா..?
அறிமுக இயக்குனர் அதுல் மஞ்ச்ரேகர் என்பவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் கதைப்படி இவருக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகர் ஒருவர் தேவைப்பட்டதால் 32 வயதேயான அக்சய் ஓபராயை அணுகியிருக்கிறார்கள்.. ஆனால் அவரோ ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க முடியாது என கறாராக சொல்லிவிட்டார்.. ஒருவேளை அவ்வளவு பெரிய அழகியுடன் கூச்சப்படுகிறாரோ என நினைத்துவிட வேண்டாம்.
இந்த அக்சய் ஓபராய் வேறு யாருமல்ல.. பிரபல நடிகர் விவேக் ஓபராயின் ஒன்றுவிட்ட சகோதரர் தான். பல வருடங்களுக்கு முன் அதாவது ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன், ஐஸ்வர்யா ராயும் விவேக் ஓபராயும் காதல் கிளிகளாய் சிறகடித்து பறந்தது பழைய வரலாறு. அதன்பின் விவேக் ஓபராயை ஒதுக்கிவிட்டு அபிஷேக்கை திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். தனது அண்ணனை அவர் ஒதுக்கிய அந்த கோபம் இப்போதும் அக்சய் ஒபராயிடம் இருப்பதால் தான் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டாராம்.