ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்லீ டைரக்சனில் விஜய்யின் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தில் மூன்று வேடங்கில் விஜய் நடிப்பதால் படத்தில் பிரமிக்க வைக்கும் ஆக்சன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாம். சண்டைக்காட்சிகள் இதுவரை பார்த்த விஜய் படங்களை போல அல்லாமல் வித்தியாசமாக, அதேசமயம் நவீனமாக எடுக்க விரும்பினாராம் அட்லீ.
இதற்காக ஹாலிவுட்டில் இருந்து மூன்று ஸ்டண்ட் இயக்குனர்களை வரவழைத்து ஆக்சன் காட்சிகளை படமாக்கியுள்ளாராம். இதில் முக்கியமானவர் கலோயின் வோடனிகரோவ் என்பவர், ஹாலிவுட்டின் அதிரடி படங்களில் ஒன்றான 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தில் பணியாற்றியவர்.. அதுமட்டுமல்ல பாகுபலி, ஷிவாய் உட்பட சில இந்தியப் படங்களின் சண்டைக்காட்சிகளில் இவரது பங்களிப்பும் இருக்கிறது.