தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு தமிழ், தெலுங்கில் நடித்துள்ள ஸ்பைடர் படம் அடுத்த மாதம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், பூம் பூம் என்ற பாடல் என ஒவ்வொன்றாக வெளியாகி வந்த நிலையில், இன்று ஸ்பைடர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஸ்பைடர் படப்பிடிப்பை முடித்ததில் இருந்து பாரத் அனி நேனு என்ற அரசியல் படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதுவரை ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்த மகேஷ்பாபு, ஆகஸ்ட் 11-ந்தேதி முதல் லக்னோவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அங்கு ஒரு மெகா சண்டை காட்சி பத்து நாட்களுக்கு மேல் படமாக்கப்பட உள்ளதாம். மகேஷ்பாபு-பிரகாஷ்ராஜ் மோதிக்கொள்கொள்ளும் அந்த சண்டை காட்சியை பீட்டர் ஹெய்ன் படமாக்குகிறாராம்.