‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அஜித் நடிக்கும் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், அவரின் அடுத்த படம் எது? அந்தப்படத்தை இயக்கப் போகிறவர் யார் ? என்ற கேள்வி எழத் தொடங்கிவிடும். சமூக ஊடகங்களில்.... சொல்லவே வேண்டாம். இவர்களாகவே ஒரு பெயரை நினைத்துக் கொண்டு அந்தப் பெயரை டிரெண்டடிங்கில் கொண்டு வருவார்கள்.
விவேகம் படம் விரைவில் வெளிவர உள்ளநிலையில், அஜித்தின் அடுத்தப்படத்தை பற்றி அறிய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வழக்கமாக ஒரு படம் முடிந்து, அது ரிலீஸான பின்பே அஜித்தின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால், இந்தமுறை, 'விவேகம்' ரிலீஸிற்கு முன்பே, அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாதான் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 25 வருட திரையுலக பயணத்தை முன்னிட்டு, அவரின் ரசிகர்கள் கும்பகோணத்தில் அஜித்திற்கு சிலை ஒன்றை நிறுவி திறப்பு விழா கொண்டாடினர். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் இமான் அண்ணாச்சி, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜித், சிவா இணையும் 4ஆவது படத்தில் தன்னை நடிக்கக் கேட்டிருப்பதாகக் கூறி இருக்கிறார்.
ஆக, மீண்டும் சிவா இயக்கத்தில்தான் அஜித் நடிக்க இருக்கிறார் என்பதும், ஏ.எம்.ரத்னத்தைப்போல் அஜித்தின் படத்தை அடுத்தடுத்து தயாரிக்கும் வாய்ப்பு சத்யஜோதி பிலிம்ஸுக்கு கொடுக்கப்பட்டுள்ளதும் ஓரளவுக்கு உறுதியாகி உள்ளது.
நெருப்பில்லாமல் புகையாதே..!