‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தனுஷை விட்டு அனிருத் விலகியதும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனுஷூடன் ஒட்டிக்கொண்டார். மறைந்த சரித்திரக்கதை எழுத்தாளர் சாண்டில்யனின் பேரனான இவர், இசையில் ஆர்வம் கொண்டதால் இசை துறையில் கால்பதித்தார். தற்போது பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் ஷான் ரோல்டன், இந்த வாரம் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்.
காரணம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் 'கதாநாயகன்' படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர்.
காமெடி நடிகரான முருகானந்தம் இயக்கி வரும் இந்த படத்தில் விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடிக்க, கேத்ரின் தெரெசா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சூரி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தின் பாடல்கள் இன்று வெளியாகி இருக்கிறது.
அதைப் போல ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ள தனுஷின் 'விஐபி-2' படம் இந்த வாரம் வெளியாகிறது. தான் இசையமைத்த இரண்டு படங்களின் இசையும் அடுத்தடுத்து மக்களை சென்றடைவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஷான் ரோல்டன்.