Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் 'மெர்சல்' சிங்கிள் பாடல் வெளியீடு

08 ஆக, 2017 - 14:30 IST
எழுத்தின் அளவு:
Mersal-single-track-soon

'தெறி' படத்திற்குப் பிறகு அட்லீ - விஜய் கூட்டணி இணைந்துள்ள 'மெர்சல்' படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாகத் தயாராகி வருகிறது. படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்தில் வடிவேலு நடிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 20ம் தேதி நடைபெறுவதற்கு முன்பாக படத்தின் பக்கா மாஸ் பாடல் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கேற்ற விதத்தில் 'தெறி' படத்தை கமர்ஷியலாகவும், பாடல்களை சூப்பர் ஹிட்டாகவும் கொடுத்த அட்லீ, ஏ.ஆர்.ரகுமான் இசையுடன் இந்தப் படத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கியிருப்பார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அஜித்தின் 'விவேகம்' படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரும் நிலையில் அதற்குப் போட்டியாக 'மெர்சல்' படத்தின் சிங்கிள் டிராக், டீசர், இசை வெளியீடு ஆகியவை களத்தில் இறங்க உள்ளன. அக்டோபர் மாதம் கேட்க வேண்டிய தீபாவளி பட்டாசு சத்தம் ஆகஸ்ட் மாதத்திலேயே கேட்டுவிடும் போலிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் அதிரப் போகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in