தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தாண்டில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி நடிகர்களுக்கு வருத்தமான ஆண்டு என்றே சொல்லலாம். சல்மான் நடிப்பில் வெளியான டியூப்லைட் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. இப்போது அதேப்போன்றதொரு தோல்வியை ஷாரூக்கானின் படம் சந்தித்து இருக்கிறது. இம்தியாஸ் அலி இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜப் ஹாரி மெட் சாஜல் படம் ஒருவாரத்தில் வெறும் ரூ.45.75 கோடி தான் வசூலித்திருக்கிறது.
கடந்த 6 ஆண்டுகளில் வெளியான ஷாரூக்கான் படங்களில் மிககுறைந்த வசூலை பெற்ற படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒருவாரத்தில், இப்படம் சல்மானின் டியூப்லைட் வசூலை கூட முந்தவில்லை. டியூப்லைட் படம் ஒருவாரத்தில் ரூ.64.77 கோடி வசூலித்தது. சுமார் ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான ஜப் ஹாரி படம் ரூ.100 கோடி வசூலித்தால் தான் பாக்ஸ் ஆபிஸில் சேரும் என்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே...!