நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தமிழகத்திலுள்ள அவரது ரசிகர்கள் அவருக்காக பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தி வந்தனர். ரசிகர்களின் வேண்டுதலுக்குப் பிறகு ரஜினியும் பூரண குணமடைந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, கோச்சடையான், கபாலி படத்தில் நடித்தார். தற்போது 2.ஓ, காலா என நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், காலா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு ரசிகர்களை சந்தித்த ரஜினி, அரசியல் பிரவேசம் குறித்து சில சூசக தகவல்களை வெளியிட்டார். அதிலிருந்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நேரத்தில், மதுரையிலுள்ள ரஜினி ரசிகர்கள், ரஜினி நீண்ட ஆயுள் பெற வழிபாடு நடத்தி சிறப்பு யாகம் செய்துள்ளார்கள். அதேப்போன்று ராமநாதபுரம், பரமக்குடி ரஜினி ரசிகர்கள், சிறப்பு பூஜையுடன் அன்னதானம் நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர்.