ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சமீபகாலமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான விஷயங்களை முன் எடுத்து வருகிறார். விரைவில் அவர் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடிகர் ரஜினியை பல்வேறு கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.,வின் தேசிய இளைஞரணி தலைவர் பூனம் மகாஜன், நடிகர் ரஜினியை சென்னையில் உள்ளது அவரது போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து தன் டுவிட்டரில் கூறியிருக்கும் பூனம், "நான் சந்தித்ததில் மிக எளிமையான ஜோடி லதா ஜி அண்ட் தலைவா" எனக் கூறியுள்ளார். அதோடு அவர்களை சந்தித்த போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார்.
ரஜினியுடனான இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. அதேசமயம், ரஜினி தனிக்கட்சி தொடங்க இருப்பதால் அது தொடர்பான விஷயங்களை பேசியிருக்கலாம் என தெரிகிறது.