தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தலைப்பைப் பார்த்ததும் போட்டியாளர்களில் ஒருவராக தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்குள் ராணா நுழைந்துவிட்டார் என்று நினைத்துவிட வேண்டாம். ராணா நடித்து வரும் 11ம் தேதி வெளிவர உள்ள 'நேனே ராஜு நேனே மந்திரி' படத்தின் பிரமோஷனுக்காகத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். புனேவை அடுத்த லோனாவாலாவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வீடு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ராணாவின் திடீர் வருகை போட்டியாளர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. அங்குள்ள போட்டியாளர்களுடன் சிறிது நேரம் செலவிட்டு, அவர்களுடன் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடினார்.
பிக் பாஸ் வீட்டையும் சுற்றிப் பார்த்து, பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜுனியர் என்டிஆருடனும் உரையாடினார். ஜுனியர் என்டிஆர் நிகழ்ச்சியை அற்புதமாகத் தொகுத்து வழங்குவதாகப் பாராட்டினார். நேற்றைய நிகழ்ச்சியில் வீட்டை விட்டு வெளியேறியவர் பெயரையும் ராணா அறிவித்தார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படவில்லை. அதனால், எதையாவது செய்து பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று இதைச் செய்துள்ளார்கள்.
தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு சில மணி நேரத்திற்கு ராணா இருந்ததைப் போல தமிழ் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் முன்னணி தமிழ் நடிகர் அல்லது நடிகை ஒருவரை 10 நாட்களுக்கோ அல்லது ஓரிரு நாட்களுக்கோ கலந்து கொள்ள வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இதற்காக சிலருடன் பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகிறது. வரும் வாரங்களில் வெளியாகவிருக்கும் படங்களில் நடித்துள்ள நாயகர்கள் அல்லது நாயகிகளில் யாராவது ஒருவரை சீக்கிரமே நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் பார்க்கலாம்.