தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துப்பறிவாளன் படப்பிடிப்பில் நடிகர் விஷால் காயம் அடைந்தார். மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்து வரும் படம் துப்பறிவாளன். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஒரு வாரமாக கடலூரில் உள்ள பிச்சாவரம், சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் இன்று படப்பிடிப்பு நடந்தது. சண்டைக்காட்சியில் விஷால் நடித்து கொண்டிருந்தார். கயிறு கட்டி விஷால் நடித்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து விழுந்தது. இதில் விஷால் காயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.