ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் கமர்ஷியல் வித் காமெடி என்கிற பார்முலாவில் வெற்றிப்பாதையில் பயணிக்கும் இயக்குனர் தான் ஷபி. இவர் இதற்கு முன்பு திலீப்பை வைத்து இயக்கிய '2 கண்ட்ரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, 100 நாட்கள் ஓடி வசூலையும் வாரிக்குவித்தது.
இந்த நிலையில் இயக்குனர் ஷபி தற்போது பிஜூமேனனை ஹீரோவாக வைத்து 'ஷெர்லக் டோம்ஸ்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஆம்.. புகழ்பெற்ற 'ஷெர்லக் ஹோம்ஸ்' கதாபாத்திரத்தின் பெயரை சற்றே மாற்றி படத்தின் டைட்டிலாக வைத்ததுடன் ஹீரோவுக்கும் அதே பெயரை சூட்டியுள்ளார் இயக்குனர் ஷபி.
பிஜூமேனனும் ஷபியும் இணையும் ஐந்தாவது படம் இது. மியா ஜார்ஜ் மற்றும் சிருந்தா ஆஷப் இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். ஷபி இயக்கிய '2 கண்ட்ரீஸ்' படத்திற்கு கதை எழுதிய நஜீம் கோயா தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார். கூடவே ஷபியும் 'அனார்கலி' இயக்குனர் சாச்சியும் இணைந்து இந்த கதை உருவாக்கத்தில் பங்குபெற்றுள்ளார்கள்.
ஐ.பி.எஸ் முடித்து மிகப்பெரிய போலீஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்பதுதான் பிஜூமேனனின் லட்சியம். ஆனால் அவரால் போலீஸ் அதிகாரியாக ஆக முடியாதாதல் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆக மாறுகிறார் என இப்படி போகிறதாம் கதை. நிச்சயமாக திலீப் நடித்த சி.ஐ.டி மூஸாவுக்கும் (தமிழில் சீனா தானா 001) இந்தப்படத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என உறுதி கூறியுள்ளார்கள் கதாசிரியர்கள்.