பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வேதாளம் படத்தில் முதல் முறையாக இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத், அஜித் கூட்டணி இணைந்தது. அந்தப் படத்தின் பாடல்கள் முழுக்க முழுக்க கமர்ஷியலாக அமைந்து இசை ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. மற்ற பாடல்களைக் காட்டிலும் ஆலுமா டோலுமா.. சூப்பர் ஹிட்டாக அமைந்து யு டியூபிலும் 2 கோடியே 67 லட்சம் பார்வைகளுடன் அதிக வரவேற்பைப் பெற்றது. அந்த ஒரு பாடலே படத்திற்கு ஒரு அடையாளமாகவும் அமைந்தது.
அந்தக் கூட்டணி மீண்டும் விவேகம் படத்திலும் இணைந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏற்கெனவே இந்தப் படத்தின் சர்வைவா பாடல் வெளிவந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது. இந்தப் பாடல் யு டியூபில் 1 கோடி பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்து இந்தப் படத்தின் தலை விடுதலை..., காதலாட... ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே, மூன்று பாடல்கள் வெளியிட்டவர்கள் இன்று மாலை மற்ற பாடல்களையும் வெளியிட்டனர்
விவேகம் பாடல்கள் பட்டியல்படி படத்தில் “ஏகே தீம் மியுசிக், வெறியேற, காதலாட (மற்றுமொரு வடிவம்), நெவர் எவர் கிவ் அப்” ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு அனைத்துப் பாடல்களும் வெளியாகிவிட்டன.
விவேகம் பாடல்கள் வெளியாகிவிட்டதால் அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள்.