Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓவியாவைப்பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்க! -சித்தார்த்

06 ஆக, 2017 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Siddarth-tweets-for-oviya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது ஹைலைட்டே ஓவியாதான். அவருக்கென்று பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி விட்டதால், அவரை பிக்பாஸில் உள்ள யாரேனும் திட்டினால் கூட ரசிகர்கள் கொந்தளித்து விடுகிறார்கள். அவர்களுக்கு எதிராகவும், ஓவியாவுக்கு ஆதரவாகவும் இணையதளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இதன் காரணமாக, ஓவியா இல்லையென்றால் பிக்பாஸே இல்லை என்கிற நிலைதான் உருவாகியிருக்கிறது.

அதோடு, கடந்த சில தினங்களாக காயத்ரி, ஓவியாவை ஆபாசமாக திட்டியதாகவும், அதையடுத்து ஆரவ்வை ஓவியா காதலித்து வருவது போலவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், மனரீதியாக பாதிக்கப்பட்ட ஓவியா, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக தற்போது இன்னொரு செய்தியை வெளியிட்டு பரபரப்பை கூட்டி வருகிறது விஜய் டிவி.


இந்தநிலையில், பிக்பாஸில் இருந்து ஓவியா வெளியேறி விட்டதாகவும், ஆனால் அவர் வெளியேறினால் பிக்பாஸ் நிகழ்ச்சியே அவுட்டாகி விடும் என்று அவரை சமாதானம் செய்து தொடர்ந்து நீடிக்க வைக்கும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும், ரசிகர்களைப்போன்று சினிமா பிரபலங்களும் ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிக்பாஸில் நடைபெற்று வரும் சர்ச்சைகளைப் பார்த்து வரும் நடிகர் சித்தார்த், தனது டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஓவியாவைப்பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்க. இது விளையாட்டான விசயமல்ல என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.


Advertisement
நாட்டுப்பற்றில் ‛முதல்வன்: மனம் திறந்த அர்ஜுன்நாட்டுப்பற்றில் ‛முதல்வன்: மனம் ... பிரகாஷ்ராஜ் இடத்தை பிடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா பிரகாஷ்ராஜ் இடத்தை பிடிக்கிறார் ...


வாசகர் கருத்து (34)

Chris - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07 ஆக, 2017 - 11:09 Report Abuse
Chris ஓவியா பண்ற மாதிரி நிஜ வாழ்க்கையில் யாருமே நடக்க முடியாது. சும்மா பேசுறதுக்கே நூறு action பண்ணுது. சினிமா போலவே இருக்கே தவிர ஒரிஜினலா இல்ல.
Rate this:
A shanmugam - VELLORE,இந்தியா
07 ஆக, 2017 - 09:20 Report Abuse
A shanmugam இவங்களுக்கு வேற வேலை இல்லை? பிக் பாஸ் நிகழ்ச்சி நாட்டுக்கு வெகு முக்கியமோ? நாட்டில் எவ்வளவோ தல போற பிரச்சனைகள் தள்ளாடி கொண்டு irukkindrathu. ஆகவே சமுதாய மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்யவேண்டும். இல்லாவிடில் தேவை இல்லாத தற்கொலை முயற்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.
Rate this:
RRavichandran - Doha,கத்தார்
07 ஆக, 2017 - 09:10 Report Abuse
RRavichandran ஓவியா, ஆர்மி என்னது. பேரு வைக்கிறாங்க பேரு. எது ஆர்மி. வெயிலிலும் மழையிலும் பசியோடும் பட்டினியோடும் மலையையும் கெடந்து சாகிறங்க அவங்க தான் ஆர்மி. எந்த பெயரை யாருக்கு வைப்பது. விவசாயத்துக்கு வையுங்கடா ஆர்மி.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07 ஆக, 2017 - 08:13 Report Abuse
Srinivasan Kannaiya ஓவியாவை பற்றி பேசுவதால் எல்லார் வீட்டிலும் அடுப்பு எரியுமா....? உழைப்பவனுக்கு ஓவியாவை பற்றி நினைக்க நேரமேது ... நீங்கள்தான் பேசிக்கொள்ளவேண்டும்...
Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
07 ஆக, 2017 - 08:07 Report Abuse
venkatesh கமலஹாசனுக்கு நேரம் சரியில்லை இந்த மொக்க நிகழ்ச்சியில் சிக்கிக்கொண்டு முழிக்கிறார். ஓவியா இருந்தா என்ன போனா என்ன அவனவன் பொழப்ப பாக்குறதுக்கே நேரம் இல்லை அதில் இது எல்லாம் ஒரு பிரச்னையை போங்க பொய் பொழப்ப பாருங்க இந்த சினிமா காரன் பின்னால் போய் தான் இன்னிக்கி தமிழ்நாடு நாறுது.
Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in