ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'வேலையில்லா பட்டதாரி'. நடுத்தரக் குடும்பத்துப் பின்னணி, வேலையில்லாத பி.இ. படித்த இளைஞனின் வாழ்க்கை ஆகிய விஷயங்கள் மிகவும் யதார்த்தமாகச் சொல்லப்பட்டது அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அனிருத்தின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்து கூடுதல் பலத்தைத் தந்தது.
மூன்று வருடங்கள் கழித்து அடுத்த வாரம் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் முக்கிய நட்சத்திரங்களுடன், இரண்டாம் பாகத்தில் ஹிந்தி நடிகை கஜோல் இடம் பெற்றுள்ளார். படத்தில் அவர் வில்லியாக நடிக்கவில்லை, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள். கஜோல் வரவு இரண்டாம் பாகத்திற்கு வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ள விதம்தான் படத்திற்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கும்.
முதல் பாகத்தில் தனுஷை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் அமிதாஷ் பிரதான் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் தனுஷை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளார். கதாநாயகனை எதிர்க்கும் கதாபாத்திரமும் வலிமையாக இருந்தால்தான் கதாநாயகனுக்கும் படத்தில் பெயர் கிடைக்கும். அது இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக அமைந்துவிட்டால் 'விஐபி' வெற்றியை 'விஐபி 2' தாண்டிவிடும்.