ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், பெருச்சாழி, நிபுணன் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இதில் அர்ஜூனை வைத்து அவர் இயக்கிய நிபுணன் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தநிலையில், அடுத்து படம் குறித்து அருண் வைத்தியநாதனிடம் கேட்டபோது, நிபுணன் படத்தின் கதையில் அர்ஜூன் சார் நடிப்பாரா என்பதே டவுட்டாக இருந்தது. ஆனால் கதையைக்கேட்ட அவர் உடனே ஓகே சொல்லி விட்டார். அதனால் அவருக்காக சில திருத்தங்களை மட்டும் செய்து படத்தை இயக்கினேன்.
அதற்கு முன்னதாக நான் இயக்கிய படம் பெருச்சாழி. மலையாளத்தில் மோகன் லாலை வைத்து இயக்கினேன். அங்கு அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழில் இயக்கினால் பெரிய வெற்றி பெறும். அதனால், அந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் யாரேனும் கிடைத்தால் தமிழில் ரீ-மேக் செய்வேன். அப்படி இல்லாதபட்சத்தில் மீண்டுமொரு புதிய கதையை தயார் செய்து இயக்குவேன். மற்றபடி எனது அடுத்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் நான் முடிவு செய்யவில்லை என்கிறார் அருண்வைத்தியநாதன்.