ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாக நடித்த முதல் படம் ஒரு பக்க கதை. இந்த படத்தில் தான் நடிகை மேகா ஆகாஷூம் ஹீரோயினாக அறிமுகமானார். பாலாஜி தரணீதரன் இயக்கினார். இப்படம் இப்போது வரை திரைக்கு வரவில்லை. ஆனால் அதன்பின் காளிதாஸ் நடித்த மீன் குழம்பும் மண் பானையும் படம் ரிலீஸாகிவிட்டது.
மேலும் ஒரு பக்க கதை படத்தில் நடித்து முடித்திருந்த நேரம், தனுஷை நாயகனாக வைத்து கெளதம்மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா பட வாய்ப்பு கிடைக்க, ஜாக்பாட் அடித்து விட்ட உற்சாகத்தில் அந்த படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார் மேகா ஆகாஷ். ஆனால் அந்த படமும் தாமதமாகி வருகிறது.
இப்படி தமிழில் நடித்த படங்கள் தாமதமாகி வந்ததைப் பார்த்த மேகா ஆகாஷ், தெலுங்கில் மிதுனுக்கு ஜோடியாக, லை-என்ற படத்தில் கமிட்டாகி நடித்தார். அதன் படப்பிடிப்பு சில மாதங்களிலேயே முடிந்து ஆகஸ்ட் 11-ந்தேதி திரை க்கு வர தயாராகி விட்டது. ஆக, தனது முதல் படம் திரைக்கு வருவதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் முகாமிட்டு அப்படத்திற்கான பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார் மேகா ஆகாஷ்.