மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
சமூக வலைத்தளங்களில் சினிமா சம்பந்தப்பட்டு, யார் பற்றிய விவாதம் அதிகம் என்று கேள்வி கேட்டால் உடனே விஜய், அஜித் என சொல்லிவிடலாம். ஆனால், அவர்களையும் ஓரம்கட்டி விட்டு கடந்த சில நாட்களாக அவர்களின் இடத்தை ஓவியா பிடித்து விட்டார்.
பல கோடி சம்பளம், பல லட்சம் ரசிகர்கள் என தமிழ்த் திரையுலகில் முக்கிய ஆளுமைகளாக இருக்கும் விஜய், அஜித்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்வதை விட, ஒரே ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முன்னணி நடிகைகளின் பட்டியலில் கூட இடம் பெறாத ஓவியா 'பிக் பாஸ்' மூலம் பெற்றுள்ள புகழ் எத்தனை பேருக்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறதோ...?.
மற்ற நடிகைகள், நடிகர்கள், மற்ற கலைஞர்கள் என ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஓவியாவுக்கு ஆதரவாகவும், மற்ற போட்டியாளர்களின் நடவடிக்கைகளை விமர்சித்து பதிவு செய்வதும் ஓவியா பற்றிய பகிர்வுகள் இன்னும் அதிகமாகக் காரணமாக அமைந்தது. ஓவியா, நேற்று தற்கொலை முயற்சி, பிக் பாஸ் விட்டு வெளியில் போய் விட்டார் என்ற தகவல் இப்போது வரை தீயாகவே எரிந்து கொண்டிருக்கிறது.
அஜித்தின் 'விவேகம்', விஜய்யின் 'மெர்சல்' படங்களின் அப்டேட் தகவல்களைக் கூடப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஓவியா பற்றிய அப்டேட் பரபரப்பாகிக் கிடக்கிறது.
நேற்று இரவிலிருந்து ஓவியா சம்பந்தப்பட்ட ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரென்டிங் ஆகி வருகிறது. ஓவியாவின் திடீர் ரசிகர்கள் கூட்டத்தால் அஜித், விஜய் ரசிகர்கள் கூட கொஞ்சம் மிரண்டுதான் போய் இருக்கிறார்கள்.