Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ஜெமினி அளவுக்கு என்னால் காதலிக்க முடியாது: துல்கர் சல்மான்

04 ஆக, 2017 - 03:20 IST
எழுத்தின் அளவு:
I-cant-love-like-Gemini-sir-says-Dulquersalman

இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் துல்கர் சல்மான், மலையாள, மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர். இன்று, தமிழ், மலையாளம், தெலுங்கு என, புதுப்படங்களுக்கு, கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு, ரொம்ப பிசி. அடுத்ததாக அவர் நடிப்பில் வரவிருக்கும், சோலோ படம் பற்றியும், தன் திரை அனுபவங்கள் பற்றியும், நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் துல்கர் சல்மான்.

சோலோ படத்தின் ஸ்டில்களே மிரட்டலாக இருக்கின்றன. அது குறித்து?


நான் நடித்த படங்களிலேயே, ரொம்ப சவாலாக இருந்த படம் சோலோ. பிஜய் நம்பியார், இந்த படத்தை இயக்குகிறார். நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய, நான்கு விஷயங்களை மையமாக வைத்து, கதை தயாராகியுள்ளது. இந்த படத்துக்கு, மூன்று பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தன்சிகா, ஸ்ருதி ஹரிஹரன், நேஹா ஷர்மா, ஆர்த்தி என, நான்கு ஹீரோயின்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட, மூன்று மொழிகளுக்கும், 11 பேர் இசை அமைத்துள்ளனர். இந்த படத்தில் நடித்தது, நான்கு படங்களில் நடித்ததற்கு சமம்.


தமிழில் அதிகம் நடிப்பது இல்லையே... ஏன்?


இப்போது என் கவனம் முழுவதும், மலையாளத்தில் தான் இருக்கிறது. தமிழில், நல்ல கதைகள் கிடைத்தால் மட்டுமே நடிக்கிறேன். தமிழில் கவனம் செலுத்தினால், மலையாளத்தில் கிடைத்த இடத்தை விட்டு விடுவேனோ என்ற பயம் இருக்கு.


ஓகே கண்மணி படத்துக்கு பின், தமிழ் ரசிகர்கள், உங்களிடம் அதிகம் எதிர்பார்த்தனரே...


ஓகே கண்மணி படத்துக்கு பின், தமிழில், மீண்டும் ஒரு காதல் கதையில் நடிக்க வேண்டாம் என, நினைத்தேன். ஆனால், காதல் கதைகள் தான் அதிகம் கிடைத்தன. இதனால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தேன். என்னை நம்பி படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு, படம் போரடித்து விடக் கூடாது என்பதில், கவனமாக இருக்கிறேன். அதனால் தான், யோசித்து முடிவு எடுக்கிறேன்.


தமிழ், மலையாள படங்களின் கதைகளுக்கு வித்தியாசம் உள்ளதா?


இரண்டு மொழி படங்களிலுமே, வலுவான கதைக்களம் இருக்கிறது. ரசிகர்கள், இப்போதெல்லாம், ரொம்ப செலக்டிவாக தான், படங்களை பார்க்கின்றனர். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற கதைகள் இருந்தால் தான், படம் ஓடும். இரு மொழிகளிலுமே, நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன.


அப்பா நடித்த படங்களின், ரீமேக்கில் நடிக்கும் ஆசை உள்ளதா?


அப்பாவுக்கென தயாரான கதைகளில் தான், அவர் நடித்தார். அந்த படங்களில் அவர் நடித்தால் தான், நன்றாக இருக்கும். அவர் நடித்தது போல், என்னால் நடிக்க முடியாது. நான், ஏதாவது புதிதாக செய்தால் தான், ரசிகர்களுக்கு பிடிக்கும். மற்றவர்கள் நடித்ததையே, நானும் நடித்தால், ரசிகர்களுக்கு பிடிக்காது.


தமிழ் நடிகர்களோடு சேர்ந்து நடிக்கும் ஆசை உள்ளதா?


எனக்கு, இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எல்லாருடனும் சேர்ந்து நடிக்க முடியும் என, நம்புகிறேன்.


உங்க குழந்தை பற்றி?


என் மகள் மரியமுடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை. விருந்தினர் போல், அவ்வப்போது வந்து செல்கிறேன். பெரும்பாலான நேரம், குடும்பத்தை பிரிந்து, வெளியூர்களில் தான் இருக்கிறேன்.


அடிக்கடி சென்னையில் பார்க்க முடிகிறதே?


சென்னையிலும், எங்களுக்கு வீடு இருக்கிறது. அதனால், அடிக்கடி வருகிறேன். சென்னையில் நான் படித்த பள்ளி மாணவர்களுடன், இந்த முறை, என் பிறந்த நாளை கொண்டாடினேன். சென்னை, எப்போதுமே எனக்கு பிடிக்கும்.


நடிகை சாவித்திரி கதையில், நீங்கள் ஜெமினி ரோலில் நடிப்பது பற்றி?


கதையை கேட்டதுமே, கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், இதில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஜெமினி சார் மாதிரி நடிப்பேனா என, தெரியவில்லை. ஆனால், முடிந்தவரை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கு. இந்த படம், தமிழில் மகாநதி என்ற பெயரில் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கின்றனர். ஜெமினி சார் அளவுக்கு, என்னால் காதலிக்க முடியுமா என, தெரியவில்லை.

உங்களின் எந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்வீர்கள்?

சினிமாவுக்கு வரும்போதே ஒரு படத்தை மற்ற மொழிகளில் ரீ-மேக் செய்ய வேண்டாம் என்ற முடிவோடு தான் வந்தேன். ஒரு மொழியில் நடித்ததை அப்படியே காப்பி பண்ணி நடிக்க எனக்கு விருப்பம் கிடையாது. எந்த மொழியாக இருந்தாலும் ஒரிஜினல் கதையிலேயே நடிக்க விரும்புகிறேன்.

மீண்டும் எப்போது மணிரத்னம் படத்தில் நடிப்பீர்கள்?
அவருடன் மீண்டு பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எப்போதும் உள்ளது. இருந்தாலும் அதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்தாண்டு பிறந்தநாள் ரொம்ப ஸ்பெஷல் போல...?
இந்தாண்டு என் பிறந்தநாளை இவ்வள பெரிய நாளாக மாற்றிவிட்டார்கள். இதற்காக எல்லோருக்கும் நன்றி. தமிழ் ரசிகர்கள் நிறைய ஆதரவு தந்து பெரிய இடம் கொடுத்திருக்காங்க, நிச்சயம் அவர்களுக்கு நல்ல படம் தருவேன். பொதுவாக என் பட விழாக்களுக்கு மணிரத்னத்தை அழைப்பது வழக்கம், இந்த முறையும் அவர் வந்தது பெருமையாக உள்ளது.

அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?
சோலோ படம் தவிர்த்து தெலுங்கில் மகாநதி படத்தில் ஜெமினி வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக உடல் எடையை 7 கிலோ வரை அதிகரித்திருக்கிறேன். லால் ஜோஸ் படம், ஸ்ரீநாத் ராஜேந்திரன் படம், சலாம் புக்ரி படம் என மூன்று மலையாள படங்களிலும், தமிழில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளேன்.

Advertisement
இளகிய மனம் கொண்ட எம்ஜிஆர்.,இளகிய மனம் கொண்ட எம்ஜிஆர்., பிரச்னைகள் எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி: அமலா பால் பிரச்னைகள் எல்லாம் எனக்கு அல்வா ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in