டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சத்ரியன் படம் சரியாக போகாததால், சற்று கவலை அடைந்துள்ள விக்ரம் பிரபு, இப்போது முழு வீச்சில், தான் அடுத்து நடிக்கும், நெருப்புடா படத்தை வெற்றியடைச் செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படம், அவரது சொந்த படம் என்பதால், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்துக்கு கிடைக்கும் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து, புதிய படங்களை தயாரிக்கவும், அவர் திட்டமிட்டுள்ளாராம்.
இந்த படத்தில், விக்ரம் பிரபுவுடன், நிக்கி கல்ராணி நடிக்கிறார். இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக உருவெடுத்துள்ள நிக்கி கல்ராணியால், இந்த படத்துக்கு இளைஞர்களின் வரவேற்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது படக்குழு.