பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விவேகம் படத்தின் ரிலீஸ் தேதியை மனதில் கொண்டு ஒதுங்கி நின்ற படங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக தங்களுடைய வெளியீட்டு தேதியை அறிவித்து வருகின்றன. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, செப்டம்பர் 7-ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ப்ரியாவின் கணவரும், அறிமுக இயக்குநருமான ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்தப்படத்தில் மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னை, கோவா, தென்காசி மற்றும் துபாயில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. நிதி சிக்கல் உள்ளிட்ட சில பல பிரச்னைகளால் சிக்கி தவித்து வந்த சர்வர் சுந்தரம் இப்போது அந்த பிரச்னைகளை எல்லாம் சமாளித்து வருகிற 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்துக்குப் போட்டியாக, விக்ரம் பிரபுவின் 'நெருப்புடா' 8-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.