குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
நிவின்பாலி, துல்கர் சல்மான், பஹத்பாசிலை தொடர்ந்து மலையாளத்தில் இருந்து அடுத்த வரவாக களம் இறங்க காத்திருக்கிறார் மலையாள சினிமாவின் இளம் நடிகரான டொவினோ தாமஸ். இங்கே விஜய் சேதுபதியின் படிப்படியான வளர்ச்சி போல, மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களில் இவர் நடித்த படங்களின் தொடர் வெற்றி ஒரு இரண்டாம் நிலை கதாநாயகனாக இருந்த இவரை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. அதன்விளைவாக தற்போது மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் மூலமாக தமிழிலும் அடியெடுத்து வைக்கிறார் டொவினோ தாமஸ்..
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ள இந்தப்படத்தின் 90 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்தப்படத்திற்கு 'அனு & அபி' என டைட்டில் வைத்துள்ளார்கள்.. கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார். இதுவரை தனது படங்களில் தனது உடல் வலிமை, காமெடி ஆகியவற்றை நிரூபித்துவிட்ட டொவினோ தாமஸ் முதன்முதலாக நடிக்கும் முழு நீள காதல் கதையாக இது உருவாகியுள்ளது.. பிரேசிலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப்படம் தயாராகியுள்ளது. வரும் செப்-22ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது..
இந்த டொவினோ தாமஸை ஹீரோவாக வைத்து தான் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மலையாளத்தில் ஒரே நேரத்தில் 'தரங்கம்', 'மாரடோனா' என இரண்டு படங்களை தயாரித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.