மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்பின் முதல் மனைவி யார் என்பதில் கேரள போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீவிரமாக விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
உறவு பெண்ணுடன் திருமணம்
திலீப்பின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். இவர், 1990ம் ஆண்டுகளில் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதற்கு முன் தனது தூரத்து சொந்தத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவர் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம், திலீப்பின் சொந்த ஊரான ஆலுவாவில் உள்ள தேசம் என்ற இடத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களை பெற போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
சினிமாவில் நுழைந்த பிறகு நடிகை மஞ்சு வாரியாருடன் திலீப் நெருங்கி பழக தொடங்கினார். இதுப்பற்றி முதல் மனைவிக்கு தெரிய வந்ததும் அவர்கள் உறவு முறிந்தது. ஆனால், திலீப் தன் முதல் மனைவியை சட்டப்பூர்வமாக பிரியவில்லை.
வசிப்பது எங்கே?
முதல் மனைவியின் பெயர் உள்ளிட்ட விவரம் இன்னும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அவர் தற்போது வளைகுடா நாட்டில் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. அவரையும், அவரது திருமணத்தின் போது சாட்சி கையெழுத்து போட்டவர்களையும் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். நடிகர் திலீப் - நடிகை மஞ்சு வாரியார் திருமணம், 2015ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இவரும் சட்டப்படி பிரிந்தனர். 2016ம் ஆண்டு நவம்பரில், நடிகை காவ்யா மாதவனை திலீப் திருமணம் செய்து கொண்டார்.