ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். இதில், சர்வதேச தீவிரவாதத்தை அளிக்கும் உளவுத்துறை அதிகாரியாக அவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடமே பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது பூம் பூம் என தொடங்கும் சிங்கிள் டிராக் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடல் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இணையதளங்களில் டிரண்டாக்கி விட்டனர். அதனால் வெளியான வேகத்திலேயே அந்த பாடல் ஹிட்டடித்து விட்டது. இந்த பாடல் ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவின் ஓப்பனிங் பாடல் என்று கூறப்படுகிறது.