அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கும் கபிலன் வைரமுத்து, திரைக்கதை அமைப்பு, வசனம், கதை விவாதம் ஆகியவற்றிலும் தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். பல்கேரியாவில் நடந்த படப்பிடிப்புக்கும் சென்று வந்திருக்கிறார். இந்த படத்தில் அக்ஷ்ரா ஹாசனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஓப்பனிங் இதுவரை எந்த தமிழ் நடிகைக்கும் கொடுக்கப்படவில்லை என்கிறார் கபிலன். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியது மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது பங்களிப்பை தந்தேன். சினிமாவின் உயிர்நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான், பாடலாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குனர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து வேண்டிய சுதந்திரத்தை தந்தார். அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும்.
இப்படத்தின் மூலமாக அஜித்திடமிந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அவரது தொலைநோக்கு பார்வை, தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டு உள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது. விவேகம் படத்தின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது. நான் எதிர்பார்த்ததை விட காட்சி அமைப்புகள் அருமையாக அமைந்து உள்ளன.
நாங்கள் திரைக்கதை எழுதும்போதே எனக்கு மெய்சிலிர்த்த காட்சி அக்ஷ்ரா ஹாசனின் அறிமுகக் காட்சி. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு எந்த நடிகைக்கும் இப்படி ஒரு அறிமுகக் காட்சி அமைந்திருக்குமா என்று தெரியவில்லை, அரங்கம் அதிரப்போவது உறுதி.
திரையரங்கில் அதைப் பார்க்கும்போது கமல், தன்னை மறந்து விசில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதிரடி காட்சிகள், பிரம்மாண்டம், கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்திருந்தாலும் மனித உணர்வுகள் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அஸ்திவாரம். அது இந்தப் படத்தில் இருக்கிறது. ரசிகர்களுடன் இணைந்து திரை அரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் தயாராக உள்ளேன்" என்கிறார் கபிலன் வைரமுத்து.