'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கைந்து படங்கள் வெளியாகியுள்ளது. இதில் குறைந்த பட்சம் 2 பெரிய படங்களாவது இருக்கும். ஆனால் இந்த வாரம் நாளை பெரிய படங்கள் எதுவுமின்றி நான்கு சிறுபட்ஜெட் படங்கள் மட்டும் வெளிவருகிறது.
பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் 11ந் தேதி மற்றும் 18ந் தேதிக்கு சென்று விட்ட நிலையில் இந்த வாரம் சிறுபட்ஜெட் படங்களின் வாரமாகியிருக்கிறது. ஏன் இந்த மயக்கம், ஆக்கம், கோடம்பாக்கத்தில் கோகிலா, மன்மத பார்வை, சதுர அடி 3500, உள்ளம் உள்ள வரை ஆகிய படங்கள் வெளிவருகிறது. இதில் ஆக்கம் மற்றும் சதுரஅடி 3500, உள்ளம் உள்ளவரை படங்கள் திகில் மற்றம் பேய் படம். ஏன் இந்த மயக்கம், இணையதள சைபர் க்ரைம் சம்பந்தப்பட்ட படம். கோடம்பாக்கத்தில் கோகிலா, மன்மத பார்வை ஆகியவை கவர்ச்சிப் படங்கள்.
விக்ரம் வேதா, மீசை முறுக்கு படங்களும், கடந்த வாரம் வெளிவந்த கூட்டத்தில் ஒருவன், நிபுணன் படங்களும் தாக்குபிடித்து ஓடிக் கொண்டிருப்பதால் நாளை வெளியாகும் படங்களுக்கு குறைந்த அளவே தியேட்டர்கள் கிடைத்துள்ளன.