தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாக நடிகர் விஜய் தனது படங்களில் பணியாற்று படக்குழுவினர் அனைவருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர். அவ்வபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களுக்கு விருந்தெல்லாம் வைத்து அசத்துவார். படப்பிடிப்பு முடிந்ததுமோ, அல்லது படத்தின் வெற்றிக்குப் பின்னரோ தனது படக்குழுவினருக்கு அசத்தலான பரிசு வழங்குவதும் விஜய்யின் வாடிக்கையான செயல் தான்..
இதற்கு முன் புலி படக்குழுவினர் 250 பேருக்கு தங்க காசு வழங்கிய விஜய், பைரவா படம் முடிந்த பின்னர் அந்தப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தங்கத்தில் செயின் பரிசாக அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தற்போது அட்லீ இயக்கத்தில் தான் நடித்துள்ள 'மெர்சல்' படத்தில் தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினர் சுமார் 200 பேருக்கு தங்க காசுகள் வழங்கி அவர்களை பாராட்டி கௌரவித்துள்ளார் விஜய்.