Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்ட் 11 படங்களுக்குள் கடும் போட்டி ?

02 ஆக, 2017 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Big-competition-on-August-11

'விவேகம்' படம் முதலில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவரலாம் என்ற ஒரு பேச்சு இருந்தது. படத்திற்கு சென்சார் முடிந்த பிறகு 24ம் தேதிதான் வெளியாகும் என்று அறிவித்தார்கள். 'விவேகம்' படத்துடன் எதற்கு மோத வேண்டும் என்று வெளியீட்டிற்குத் தயாராக இருந்த சில படங்களின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் இருந்தார்கள்.

'தரமணி' படத்தின் வெளியீட்டுத் தேதியை மட்டும் ஆகஸ்ட் 11 என்று எப்போதோ அறிவித்துவிட்டார்கள். 'விவேகம்' படத்துடன் வெளிவருவது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இருந்தாலும் மற்றவர்கள் எதற்கு நாமே சிக்கிக் கொள்வது என யோசித்திருக்கலாம். 'விவேகம்' 24ம் தேதி வெளியாகும் என்று சொன்னதும் நேற்றே மற்ற புதிய படங்களின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளிவர ஆரம்பித்தது.

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி நடிக்க தளபதி பிரபு இயக்கியுள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்', தனுஷ், கஜோல், அமலா பால் நடிக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்கள் ஆகஸ்ட் 11ல் வெளியாகும் என நேற்று அறிவித்தார்கள். அந்தப் படங்களுடன் விதார்த், பாரதிராஜா நடிக்க, நித்திலன் இயக்கியுள்ள 'குரங்கு பொம்மை' படமும் ஆகஸ்ட் 11ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களுடன் தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 'கௌதமி புத்ர சாதகர்ணி' படத்தின் தமிழ் டப்பிங்கும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தையும் அதிக தியேட்டர்களில் வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆக, இன்றைய நிலவரப்படி ஆகஸ்ட் 11ம் தேதியன்று “தரமணி, வேலையில்லா பட்டதாரி 2, பொதுவாக எம்மனசு தங்கம், குரங்கு பொம்மை” ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும், 'கௌதமி புத்ர சாதகர்ணி' படமும் வெளிவர உள்ளன. ஒவ்வொருவரும் அவர்களது படங்களை அதிக தியேட்டர்களில் வெளியிட முயற்சிக்கிறார்கள். இதனால், நல்ல தியேட்டர்களைப் பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in