ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கெளதமிபுத்ர சட்டகர்னி என்ற படத்தை அடுத்து தற்போது தனது 101வது படமான பைசா வசூல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டு அதை 5 மில்லியனுக்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 17-ந்தேதி பைசா வசூல் படத்தின் ஆடியோ வெளியிடப்படுகிறது. தனது படங்களின் ஆடியோ விழாக்களை ஆந்திராவின் பல்வேறு நகரங்களில் நடத்தியுள்ள பாலகிருஷ்ணா, இந்த படத்தின் ஆடியோ விழாவை தெலுங்கானாவில் உள்ள முக்கிய நகரமான கம்மத்தில் பிரமாண்டமாக நடத்துகிறாராம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுக்கல் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு பாலகிருஷ்ணா-ஸ்ரேயா நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது.