தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகைகள் சில்க் மற்றும் குஷ்புவுக்கு கோவில் கட்டி பூஜித்த தமிழ் மண்ணில் தற்போது, நடிகர் அஜித்துக்கு சிலை அமைத்துள்ளனர். அடுத்த கட்டமாக கோவில் கட்டப் போவதாகவும் அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர் அவரது ரசிகர்கள்.
நடிகர் அஜித்தின் விவேகம் படம் இம்மாதம் 24ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகிவிட்டனர். அதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் சிலர், அஜித்துக்கு சிலை அமைத்துள்ளனர். சிமெண்ட்டால் அமைக்கப்பட்டிருக்கும் அந்த சிலையை, நாளை(ஆகஸ்ட் 3-ம் தேதி) திறந்து வைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
சிலை திறப்பு விழாவோடு, அஜித் பெயரைச் சொல்லி, நலத் திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கும் ரசிகர்கள், ரத்ததான முகாமுக்கும் சிலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அருகிலேயே ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இந்த சிலை திறப்பு விழாவுக்கு, ரசிகர்கள், அஜித் வர வேண்டும்; குறைந்தபட்சம் சிலை அமைத்தவர்களை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்து, அஜித்தை பல நாட்கள் அணுகியதாகவும், அதற்கு நடிகர் அஜித் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.
இப்படி நடிகர் அஜித்துக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த ரசிகர்கள், திடீர் என சிலை அமைத்துள்ளதைத் தொடர்ந்து, அங்கேயே இருக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள், அவருக்கும் சிலை அமைக்கும் யோசனையில் ஆழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் விஜய்க்கு இதுபோன்று சிலை வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.