ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இலங்கை தமிழரான ஒலிவியா என்பவர் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெரிய ரசிகை. ரஹ்மான் இசை அமைப்பில் காற்று வெளியிடை படத்தில் இடம்பெற்ற சாரட்டு வண்டியிலே... என்ற பாடலை வீணையில் இசைத்து அதனை தனது பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார். இது மிகுந்த வரவேற்பை பெற்றது.
இது ஏ.ஆர்.ரகுமான் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. அந்த பதிவை அப்படியே எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். ஒரு ரசிகையின் இசையை டுவிட்டரில் ரஹ்மான் பதிவிடுவது ஆச்சர்யமான ஒன்று தான். இதன் மூலம் ஒலிவியாவின் வீணை இசை 40 மில்லியன் ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது.
விரைவில் தனது அடுத்த படத்தில் ஒலிவியாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ப்பு தரலாம் என தெரிகிறது.